Friday, 5 April 2013

” எலுமிச்சை “

வியர்வை நாற்றத்தை நீக்கும் அந்த கனி ” எலுமிச்சை “ தான், எத்தனை நாட்களில் வியர்வை நாற்றம் நீங்கும் 

என்று கேட்கிறீர்களா சரியாக மூன்று மணி நேரம் தான். அடுத்த நாள் அதிகாலை நண்பரிடம் சென்று எலுமிச்சை 

வாங்கி கொடுத்து அதில் அரை பழத்தை மட்டும் வெட்டி உடல் எங்கும் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் கழித்து 

குளித்துவிட்டு வர சொன்னோம் கூடவே ஒரு கண்டிசன் குளிக்கும் போது சோப்பு கூட போடக்கூடாது , குளித்த

 பின் வாசனைத்திரவியங்கள் , பவுடர் பூசக்கூடாது என்றோம். நம்மை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார், குளித்த பின் 

காலை 8.30 மணிக்கு உங்கள் வீட்டுக்கு வருகிறேன், அரை மணி நேரம் என்னுடன் தான் இருக்க அருகில் இருக்க 

வேண்டும் என்றார் , தாராளமாக வாங்க என்று சொல்லிவிட்டு நகர்ந்தோம், சரியாக 8.30 மணிக்கு வந்தார் நாம் 

அருகில் உட்கார்ந்தோம், எப்படி இருக்கிறது மருந்து வேலை செய்கிறதா என்று கேட்டோம். இப்போது நன்றாக 

இருக்கிறது எந்த நாற்றமும் இல்லை ஆனால் சாயங்காலம் வரை பார்த்தபின் தான் மருந்து எப்படி வேலை 

செய்கிறது என்று சொல்வேன் என்றார், சாயங்காலம் 6 மணிக்கு வந்தார் அவர் அருகில் தான் நாம் 

ட்கார்ந்திருந்தோம் எந்த நாற்றமும் இல்லை, வியர்வை எப்போதும் போல் தான் வருகிறது ஆனால் வியர்வை 

நாற்றம் என்பது துளிகூட இல்லை என்று சொல்லி மனதார நன்றி கூறினார்.


Monday, 1 April 2013

கழிவுகளின் தேக்கமே நோயாக மாறுகிறது.


நம் உடலில் ஏற்படும் கழிவுகளின் தேக்கமே நோயாக மாறுகிறது.

1. மலசிக்கல். 
2. சளி 
3. கெட்ட கொழுப்பு
4. கெட்ட சர்க்கரை
5. உப்பு.

இந்த கழிவுகளை முறையாக சுத்தம் செய்யாவிடில் அங்காங்கே தேங்கி உள்  உறுப்புகள் செயல்பாட்டில் குறுக்கிடுகிறது.
முதலில் கழிவுகளை வெளியேற்றுவதில் கவனம் வேண்டும். பிறகு கழிவு தேங்காத வண்ணம் உணவு வகைகளை மாற்றவேண்டும்.  

கழிவுகள் வெளியேற : எண்ணெய் கொப்பளிப்பு - தண்ணீர் மருத்துவம் - எனிமா குவளை மூலம் மலக்குடல் சுத்தம் - மூச்சு பயிற்சி.

குறைவான கழிவுகள் உள்ள உணவு : இயற்கை உணவினால் மட்டுமே சாத்தியம்

கழிவுகள் இல்லாத தேகம் சுத்த தேகம். சுத்த தேகத்தில் நோய்கள் குடியிருக்க அனுமதி இல்லை !! 

சுத்த தேகம் பெற வழிமுறைகள் :
1. எண்ணெய் கொப்பளிப்பு.
2. கரிசாலை ..வேம்பு ..கருவேலம். நாயுருவி வேர் போன்ற மூலிகை பல் பொடியால் பல் துலக்குவது.
3. தண்ணீர் மருத்துவம் 
4. இயற்கை எனிமா குவளை கொண்டு மலக்குடல் தூய்மை செய்வது.
5. மூச்சு பயிற்சி. ( நுரையீரல் சுத்தம்).

6. இயற்கை உணவு உண்பது. இயற்கை உணவால் உடலில் கழிவு அதிகம் சேராது 

( பசித்தபின் உண்ணவேண்டும்/ கூல்போல் மென்று உமிழ் நீருடன் உண்ணவேண்டும்)  
7. உபவாசம். (மாதம் இரண்டு நாட்கள் ) 
8. நல்ல உறக்கம். குறிப்பாக பிரிக்கப்பட்ட கழிவுகள் அங்கங்கே தேங்கும் நேரம். ( 1-4AM ).
9. தவம் தியானம் செய்து சாந்தமான மனநிலையில் இருப்பது.

இதெல்லாம் செய்வது சிரமம் என்று நினைத்தால் ......  பணத்தையும் நேரத்தையும் சேமிக்க ஆரம்பிக்கவும். ( மருத்துவர்கள் / மருத்துவமனை தேடி செல்ல !!!)